திருப்பதியில் குழந்தை மனைவியுடன் பிரபுதேவா!!

 
பிரபுதேவா

இந்திய அளவில்  மிகச்சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவா. இவரது கோரியோகிராஃபியால் ஹிட்டான பாடல்கள் ஏராளம்.   ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உட்பட  பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தவர்.  இயக்குநர், நடன அமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்  பிரபுதேவா .இவர் தமிழ் திரையுலகில்   காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.   ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருந்தவர்.  இவர் கடைசியாக நடித்த பகீரா  படம் படுதோல்வியை சந்தித்தது. டைரக்டர் பிரபுதேவா: 2005ல் பிரபுதேவா  தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது.

பிரபுதேவா

இதன் பிறகு  தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல்  உட்பட பல படங்களை இயக்கினார். இத்துடன் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 என   பல படங்களை இயக்கினார்.  பிரபுதேவா தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டதில் அவர்களுக்கு மூன்று மகன்கள்.இதில் ஒருவர்  உயிரிழந்துவிட்டார். இதன் பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு  நயன்தாராவை காதலித்தார். நயன்தாரா  பிரபுதேவாவுக்காக  மதம் மாறவும் செய்தார். ஆனால்  இருவரின் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது.  

பிரபுதேவா

பிரேக் அப்பிற்கு பிறகு சிங்கிளாக இருந்த பிரபுதேவா சில வருடங்களுக்கு முன்னதாக மருத்துவர் ஹிமானி சிங்கை  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததை பிரபுதேவா மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.  குழந்தைக்காகவும் மனைவிக்காகவும்   நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறேன். எனவே சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிவிடுவேன் என அறிவித்திருந்தார்.   இந்நிலையில் பிரபுதேவா தனது மனைவி ஹிமானி சிங் மற்றும் பெண் குழந்தையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.  இன்று காலை விஐபி பிரேக் மூலம் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து   தீர்த்த பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web