துணை நடிகர் பிரதீப் ராஜ் கொலை வழக்கு... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் !

 
துணை நடிகர்

 

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ் (28). சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்த இவர், பட வாய்ப்புகள் இல்லாத காலங்களில் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் கடன் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்ஸ்

  •  பிரதீப் ராஜின் தாயார் ராணி, நவநீதம் என்பவரிடம் கடன் வாங்கி அந்தப் பணத்தை வட்டிக்குவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

  • கடந்த ஜூலை 27-ஆம் தேதி நவநீதம் பணம் கேட்டுச் சென்றபோது, பிரதீப் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பணத்தைத் தர முடியாது என மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நவநீதம் தற்கொலைக்கு முயன்று, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

  • இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் பிரதீப் ராஜைக் கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பிரதீப் ராஜ் காவல் நிலையத்திலும், கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார்.

 மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

  • இதற்கிடையே, நவநீதம் நடத்தும் டிபன் கடைக்கு அருகில் பிரதீப் ராஜும் அவரது நண்பர்களும் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • இது தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் எச்சரித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் நடந்து சென்ற பிரதீப் ராஜை, நவநீதத்தின் மகன் நவீன் மற்றும் அவரது கூட்டாளிகள் வழிமறித்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.