அசத்தல் சாதனை ... சர்வதேச செஸ் போட்டியில் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்!

87வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் நடந்து வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளின் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா இருவரும் தலா 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வந்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற 13வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தனர். குகேஷ் சக நாட்டவரான அர்ஜுன் எரிகைசிக்கு எதிராகவும், பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிராகவும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மீண்டும் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தனர். வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் சாதனை படைத்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!