தமிழகத்தையே உலுக்கிய ஆணவ கொலை.. பிரவீன் மனைவி ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளி 26 வயது பிரவீன். இவர் ஜல்லடம்பேட்டை பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஷர்மியை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பள்ளிக்கரணை பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.ஷர்மி வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்தது பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஷர்மியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி பெற்றோரின் அறிவுரையை மீறி பிரவீனை திருமணம் செய்த ஷர்மியை பழிவாங்க நினைத்தனர்.
பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் குடிக்க சென்றார். பின்னர் குடித்துவிட்டு வெளியே வந்த பிரவீனை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீனை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன் இரவு உயிரிழந்தார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பிரவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை கொன்றுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஜோதிலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்த சம்பவத்திற்கு பழிவாங்க, தினேஷின் தங்கை ஷர்மியின் கணவனை பிரவீனை கொன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட பிரவீன், 2022ல் பள்ளிக்கரணை பகுதியில் சாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏ3 குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து தினேஷுக்கு போன் செய்த விஷ்ணு, ஷர்மியின் அண்ணன் உன்னிடம் பேச விரும்புவதாக கூறி மதுபான விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்பின், அங்கு வந்த பிரவீனை ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கி வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா சகோதரர் நரேஷ் மீது இதுவரை போலீஸார் வழக்குப் பதியவோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை . இதனால் ஷர்மிளா கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என நினைத்து ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழுத்து எலும்பு, நரம்பு, பாதிக்கப்பட்டதால் ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷர்மிளா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!