கர்ப்பமாக்கி கழட்டி விட்ட காதலன்.. பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய்.. அதிர்ச்சி பின்னணி!
அஸ்ஸாமை சேர்ந்தவர் சர்புதீன். இவரது மகள் ஷகினாபேகம் (22). பெரும்புதூரை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அசாமில் இருந்தபோது, அதே மாநிலத்தைச் சேர்ந்த இந்து இளைஞரான சுமன் (25) என்பவரை காதலித்தார். ஷகினா பேகம் சென்னை வந்தபோது, சுமனும் இங்கு வேலை பார்த்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் சுமன், ஷகினா பேகத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி நெருங்கி பழகினார்.
இதில் ஷகினா பேகம் கர்ப்பமானார். இதனால் ஷகினா பேகம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவ்வப்போது வற்புறுத்தி வந்துள்ளார். சுமனும் தட்டி கழித்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த ஷகினா பேகத்திடம் பேசுவதை சுமன் தவிர்த்து வந்தார். இதனால் ஷகினா பேகம் விரக்தியடைந்தார். இந்நிலையில் சுமன் திடீரென மாயமானார். பலமுறை அவருக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. அதனால், அசாம் சென்றிருக்கலாம் என எண்ணி, அங்கு சென்று பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் ஷகினாபேகம் சென்னைக்கு வந்தார். விடுதியில் தங்கி கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையில், ஹாஸ்டலில் உள்ளவர்கள் கர்ப்பம் குறித்து கேட்கும் போதெல்லாம், 'நான் விரைவில் என் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று ஷகினா பேகம் சமாளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஓட்டலில் இருந்த அனைவரும் வேலைக்கு சென்றனர். ஷகினாபேகம், வேலைக்கு செல்லவில்லை. மதியம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. விடுதியில் யாரும் இல்லாததால், தனி அறையில் கதறி அழுதார். சிறிது நேரத்தில் யார் உதவியும் இல்லாமல் பெண் குழந்தை பிறந்தது. கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டது. ஷகினா பேகம் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு ஷகினா பேகம் எழுந்தார். அறை முழுவதும் ரத்தக்கறை இருந்தது. குழந்தை அழுது கொண்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். பின்னர், குழந்தையை எங்காவது வீச முடிவு செய்தார். அதன்படி, குழந்தையை விடுதியின் பின்புறமுள்ள குளத்தில் வீசினார். குழந்தை தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தது.
மாலையில் அவரது தோழிகள் வேலை முடிந்து விடுதிக்கு வந்தனர். ஷகினா பேகத்திடம் விசாரித்த போது, தனக்கு குழந்தை பிறந்த விவரங்களையும், அதை குளத்தில் வீசிய சம்பவத்தையும் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக குளத்துக்குச் சென்று தூக்கி வீசப்பட்ட சிசுவை மீட்டனர். பின்னர் தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவலின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ஷகினா பேகத்திடம் புகார் பெறப்பட்டு, அவரது விருப்பப்படி செங்கல்பட்டில் உள்ள நவாப் ஜாமியா மசூதியில் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!