கர்ப்பிணி உள்பட 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை... போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது மாட்டிய ராகுல்!

 
பாலியல் பாலியல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு மாத காலமாகப் பெண்களைக் குறிவைத்துத் தொடர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்த கொடூரக் குற்றவாளியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட 4 பெண்களைச் சிதைத்த இந்த அரக்கனின் பிடிபட்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குர்ஜார் என்பவன் தான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி. இவன் சாதாரணமான ஆள் கிடையாது; ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் இவன் மீது கொலை முயற்சி, கடத்தல் என சுமார் 33 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவனைப் பிடிக்க ஜெய்ப்பூர் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

போலீசாரிடம் சிக்கிய ராகுலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, அவன் தப்பியோட முயன்றான். அப்போது ஏற்பட்ட மோதலில் அவனுக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவனை மடக்கிப் பிடித்த போலீசார், அவனுக்கு உதவியாக இருந்த மேலும் இரண்டு கூட்டாளிகளையும் கம்பிக்கு பின்னால் தள்ளினர்.

பலாத்காரம் பாலியல் சிறுமி

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜெய்ப்பூர் பகுதியில் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் குற்றங்களால் ஜெய்ப்பூர் வாசிகள் கடும் பீதியில் இருந்த நிலையில், இந்த முக்கியக் குற்றவாளி சிக்கியுள்ளது ஓரளவுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.