வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை துன்புறுத்தும் கணவர் குடும்பத்தினர்.. கதறும் இளம்பெண்!

 
சரண்யா

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அடுத்த கொங்கரநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகள் சரண்யா (வயது 26), நர்சிங் படித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது சரண்யா தனியார் மேட்ரிமோனியல் மொபைல் ஆப் மூலம் மாப்பிள்ளை தேடியுள்ளார். கொத்தங்குடி பாரதி தெருவை சேர்ந்த தனபால் மகன் ரகு என்பவர் சரண்யாவின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

ரகு, சரண்யாவை திருமணம் செய்து கொண்டு, திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் எதிரில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, சரண்யாவை திருமணம் செய்து கொண்டு, அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். சரண்யாவையும், ரகுவையும் எந்த ஆட்சேபனையும் இல்லாமல் அவர்களது வீட்டில் வசிக்க அவர்களது பெற்றோர் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சரண்யா கர்ப்பமாக உள்ளார். அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ரகுவின் சகோதரிகள் சுமதி மற்றும் சுதா ஆகியோர் வரதட்சணை கேட்குமாறு சரண்யாவிடம் தெரிவித்தனர்.

சரண்யா மறுத்ததால் ரகுவின் சகோதரியும், தாயும் சரண்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. சரண்யாவின் இரட்டைக் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரகு தனது மனைவியை குடும்பத்தில் இருந்து அழைத்துக்கொண்டு சென்னை திருவான்மியூரில் தங்கியுள்ளார். இந்நிலையில் சரண்யா இரண்டாவது முறையாக மீண்டும் கருவுற்றுள்ளார். இத்தகவலை கேள்விப்பட்ட ரகுவின் சகோதரிகள் கடந்த 22ம் தேதி சென்னையில் உள்ள வீட்டுக்கு வந்து ரகுவையும், சரண்யாவையும் சொந்த ஊரில் வாழ அனுமதிப்பதாக கூறி கொத்தங்குடிக்கு அழைத்து வந்தனர்.

கொத்தங்குடியில் சரண்யாவை குடும்பத்தினர் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 24ம் தேதி புகார் அளித்தார். போலீசார் கணவர் ரகுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது, தான் ஒன்றாக வாழ்ந்தோம், ஆனால் சரண்யாவை திருமணம் செய்யவில்லை என்றும் காவல் நிலையத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், புகாரை விசாரிக்க எதுவும் இல்லை எனக்கூறி சரண்யாவை திருப்பி அனுப்பினர். இதையடுத்து, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிடம் கர்ப்பிணிப் பெண் சரண்யா கடந்த 27ஆம் தேதி புகார் அளித்தார். புகாரை முழுமையாக விசாரித்து வழக்குப் பதிவு செய்ய அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். ஆனால், கடந்த 7 நாட்களாக தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனைத்து மகளிர் காவல் துறையினர் அலைக்கலைப்பதாகக் கூறி  காவல் நிலைய வாயிலில் கர்ப்பிணிப் பெண்ணான சரண்யா அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

மேலும், தனது கணவர் ரகுவின் குடும்பத்தினரிடம் இருந்து போலீசார் பணம் வாங்கிக்கொண்டும், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு மகளிர் காவல் நிலையம் செயல்படுவதாகவும் சரண்யா குற்றம் சாட்டினார். நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றார். இதையடுத்து, உப்பாளையம் காவல் ஆய்வாளர் சரண்யாவிடம் பேசி விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சரண்யா தனது போராட்டத்தைக் கைவிட்டார். கர்ப்பிணி பெண்ணின் போராட்டத்தால் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web