கர்ப்பிணிகள் கண்ணீருடன் புகார்.. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கலெக்டர் வந்தனா திடீர் ஆய்வு!
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று வந்த புகார்களை அடுத்து, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முறையான சிகிச்சையும் உரிய பராமரிப்பும் வழங்கப்படுவதில்லை என்று தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்து வந்தன.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலர் கண்ணீருடன் தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவியது.
கர்ப்பிணிகளின் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வந்தனா கர்க் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் தீவிரமாக ஆய்வு செய்தார்.
