நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!! திருமண நாளில் சோகம்!!

 
நிவேதா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  துத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 19வயது நிவேதா இவர்  உறவினரான அமிர்தகுமாரை காதலித்து  பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி   திருமணம் செய்து கொண்டுள்ளார்.  காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு இவர்கள் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்  தண்டல்கழனி பட்டுக்கோட்டை அழகிரி தெருவில் வசித்து வந்தனர். அமிர்தகுமார் டிடிஎச் டிஷ் அமைக்கும் பணி செய்து வந்தார்.  இவரது மனைவி நிவேதா 9 மாதங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஜூலை  30ம் தேதி இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். திருமண நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக அமிர்தகுமாரின் சகோதரி மெர்சி 30ம் தேதி மாலை இவர்களது வீட்டிற்கு வந்த போது நிறைமாத கர்ப்பிணியான நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி துடித்தார்.  

நிவேதா


அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நிவேதாவை மீட்டு  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே  நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.  சடலத்தை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
முதற்கட்ட விசாரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக தமது கணவரை பணிக்கு செல்லாமல் வீட்டில் இருக்க   நிவேதா கூறியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தற்போது வெளியே செல்ல வேண்டாம்.   குழந்தை பிறந்த பிறகு கொண்டாட்டங்களை பார்த்து கொள்ளலாம் எனவும் மனைவியை சமாதானம் செய்து விட்டு அமிர்தகுமார் பணிக்கு சென்று விட்டார்.  தன்னுடைய முதல் திருமண நாளிலேயே ஆசையை நிறைவேற்றாமல் அமிர்தகுமார் வேலைக்கு சென்றதால்  நிறைமாத கர்ப்பிணி நிவேதா விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து   நிவேதாவின் சகோதரி மேகலை “ தமது தங்கையின் கணவர் அமிர்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், இதனால் இருவருக்கும் இடையே   அடிக்கடி சண்டைநடந்து வந்ததாகவும், தங்கையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.  திருமணமாகி 7ஆண்டிற்குள் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் அளவிலான விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

நிவேதா
இந்நிலையில்   தமது கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் அமிர்தகுமார் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் பணிக்கு செல்லவில்லை.   வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால், தமது கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து சம்பவம் நடைபெறாமல் இருந்திருக்குமே என எண்ணி எண்ணி குற்ற உணர்ச்சியில் குமுறி அழுதுள்ளார்.   இந்நிலையில் நேற்று  அதிகாலை அமிர்தகுமாரின் நண்பர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வந்த போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது அமிர்தகுமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.   அதிர்ச்சியடைந்த நண்பர் செங்குன்றம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அமிர்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web