இளம்பெண் விவகாரத்தில் முன்விரோதம்... வீட்டின் முன் நின்றிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

 
அரிவாள் வெட்டு

சென்னை மண்ணடி பகுதியில் வீட்டின் முன்பு நின்றிருந்த நபர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணடி பகுதியில் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த நபர் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

பெண் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட சாதீக், அப்துல்லா உள்ளிட்ட 4 பேரை உடனடியாகக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.