சிவாஜியின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி மறைவுக்கு பிரேமலதா இரங்கல்!
Sep 20, 2026, 19:30 IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி (71) காலமான செய்தியறிந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

சாந்தி நாராயணசாமியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்ததாகத் தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், பழகுவதற்கு மிகவும் இனிமையானவரான அன்பு சகோதரி சாந்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
மறைந்த சாந்தி நாராயணசாமியின் ஆன்மா சாந்தியடையத் தான் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
