தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு!

 
பிரேமலதா

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. இதனையடுத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், பதவிகளில் இருப்பவர்கள் இலவச பொருட்கள் நன்கொடைகள் வழங்குதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேமலதா

இது குறித்து தேர்தல்  நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக  அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

பிரேமலதா

இதன் பேரில்  புகார் அளிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   பிரேமலதா தனது பிறந்தநாளில்  தேமுதிக கட்சி அலுவலகத்தில் 300 பேருக்கு இலவச தையல் பயிற்சிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web