பாய்ச்சலுக்கு தயாராகும் தவெக... விஜய் வாகன பிரச்சாரம் செய்ய வியூகம்!

 
விஜய்

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தவெக கோவையில்  26, 27ம் தேதி   விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டத்தை நடத்த உள்ளது.  

விஜய்
விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. பூத் கமிட்டி, மக்களை சந்திப்பதில் மட்டுமே தற்போது த.வெ.க கவனம் செலுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது ,உறுப்பினர்கள் சேர்க்கையில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் த.வெ.க, மக்கள் பயணத்தை முடித்த பின்னரே கூட்டணி குறித்து விஜய் முடிவு எடுப்பார் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விஜய்
இந்நிலையில் விரைவில் தவெக தலைவர் விஜய் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக, கொள்கை குறித்து நிர்வாகிகளுக்கு  வாகன பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வாகன பிரச்சாரம் மூலம் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web