குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை... முழு தகவல்கள் !

இந்தியாவில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்தியாவின் IT மற்றும் Digital India திட்டங்கள் உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன எனவும்,உலகின் வளர்ந்த நாடுகளை இந்தியாவின் UPI பரிவர்த்தனை ஈர்த்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ” மத்திய அரசு, Make in India மற்றும் Atmanirbhar Bharat ஆத்மநிர்பர் பாரத் திட்டங்களின் கீழ், தொழில்துறையை ஊக்குவித்து வருகிறது. இந்தியா இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது. நமது விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் அனைவரும் இதில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அதைப்போல, இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறை இன்று உலக நாடுகளை ஈர்க்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு நாடுகள், இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை தங்கள் கட்டமைப்புடன் இணைக்க ஆர்வம் காட்டுகின்றன.இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில், UPI ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறேன். இதன் பயன்பாடு சர்வதேச அளவில் விரிவடைய வேண்டும் என்பதே நமது நோக்கம்” எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ” இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத வகையில், மும்மடங்கு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முக்கிய முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது. என் அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கு நவீன கல்வி முறையை உருவாக்கி வருகிறது” என மகிழ்ச்சியாக இருக்கிறது.
இத்தகைய கல்வி முறையில் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள். புதிய கல்வி முறையில் மொழி கற்றல், சிறந்த ஆக்கபூர்வ பயிற்சிகள், மற்றும் அறிவியல் பரிசோதனைகள் ஆகியவை முன்னேற்றம் அடைந்துள்ளனர். நமது இந்திய அணிகள் ஒலிம்பிக், பாராலிம்பிக் உட்பட அனைத்து உலகளாவிய போட்டிகளிலும் அற்புதமாக செயல்பட்டு வருகின்றன. இது இந்திய விளையாட்டுகளின் முக்கிய முன்னேற்றம், மற்றும் சமூகத்தின் மகிழ்ச்சியான செயல்பாடுகளின் பிரதிபலிப்பு” எனவும் திரௌபதி முர்மு பேசியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!