விருதுநகர் வெடிவிபத்து - குடியரசுத் தலைவர் திரவுபதி இரங்கல்!

 
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

விருதுநகர் விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு, குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ள அவர், இந்தக் கடினமான நேரத்தில் அவர்களது துயரத்தில் பங்கெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெடிவிபத்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு

விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் மற்றும் மீட்புப் பணியின் போது காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெறத் தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பில் நிவாரணத் தொகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசு வெடிவிபத்து

தற்போது சிதைந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி 90% நிறைவடைந்துள்ளது. 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.