ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த 6 நாடுகளின் தூதர்கள்!

 
draupadi murmu

 

இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், ஆறு நாடுகளின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்துத் தங்களது நற்சான்றிதழ்களை முறைப்படி வழங்கினர்.

தெற்கு சூடான் திருமதி சிடோனா அப்தாா ஓஸ்மான், ஐக்கிய அரபு அமீரகம் திரு. அப்துல்லா சயீஃப் அலி ஸ்லயீம் அல் நுஐமி, நைஜீரியா திரு.முகமது சயீது தாஹிரு, மால்டோவா: திருமதி இங்கா இயோனேசி, ஜெர்மனி டாக்டர் ஜாஸ்பர் வீக், ஸ்வீடன் திருமதி பெட்ரா மேனண்டர் என தூதர்கள் அனைவரும் குடியரசுத் தலைவரிடம் தங்களது நியமன நற்சான்றிதழ்களை  முறைப்படி வழங்கினர்.

நற்சான்றிதழ் வழங்கிய பிறகு, இந்தியாவுடனான வர்த்தகம், கலாச்சாரம், இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலக் கூட்டாண்மை ஆகியவை குறித்துக் குடியரசுத் தலைவருடன் தூதர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள தூதர்களை வரவேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவர்களின் பதவிக் காலத்தில் இந்தியாவுடனான சர்வதேச நட்புறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விவரங்கள் இந்திய பத்திரிகை தகவல் பணியகம் (PIB) வெளியீட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன.