புயல் எச்சரிக்கை எதிரொலி: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு!

 
திரௌபதி முர்மு

 

புயல் எச்சரிக்கை காரணமாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திரௌபதி முர்மு

முர்மு தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டம் மற்றும் ரைரங்பூருக்கு அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் செல்லத் திட்டமிட்டிருந்தார். வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளதால், பாதுகாப்பு கருதி பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இதன்படி, ஒத்திவைக்கப்பட்ட பயணம் நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணம் ரத்து செய்யப்படவில்லை; தேதிகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. புதிய அட்டவணைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.