பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு!

 
பாரத ரத்னா
 

இன்று புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், எல்.கே. அத்வானி  உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். நரசிம்மராவ் பாரத ரத்னா விருதை அவரது மகன் பி.பி. பிரபாகர் ராவும், சரண் சிங் சார்பில், அவரது பேரன் ஜெயந்த் சௌதரியும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பாரத ரத்னா விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

பாரத ரத்னா


மறைந்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மறைந்த பிகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குருக்கு அறிவிக்கப்பட்டிருந்த பாரத ரத்னா விருதை அவரது மகன் ராம் நாத் தாக்குர் பெற்றுக்கொண்டார்.

பாரத ரத்னா
இவ்விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி உள்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web