செம... இனி கண்ணாடியே தேவையில்ல... 15 நிமிஷத்தில கண்பார்வையை தெளிவாக்கும் சொட்டுமருந்து!

 
கண் சொட்டுமருந்து


 தற்போதைய அவசர யுகத்தில் பலரும் மொபைல் , லேப்டாப் பார்த்து கண் கண்ணாடிகளுடன் வாழ்ந்து வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக   40 வயதை கடந்தாலே ரீடிங் கண்ணாடியை அணிவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதனால்தான் 40 வயதை கடந்தவர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாக ரீடிங் கண்ணாடிகளை மொத்தமாக அகற்றக் கூடிய ஒரு புதிய கண் சொட்டு மருந்துகளுக்கு 'இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்'  ஒப்புதல் அளித்துள்ளது.

சொட்டு மருந்து

உலகம் முழுவதும் இந்த வகையான பிரஸ்போபியா பாதிப்பால் 180 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பாதிப்பினை முக்கியமாக எடுத்துக்கொண்டு தற்போது PresVu என்ற கண் சொட்டு மருந்தினை உருவாக்கியுள்ளனர்.40 வயதை கடந்தவர்களின் கண்ணாடி தேவைகளை குறைக்கும் வகையில் இந்த கண் சொட்டு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இந்த கண் சொட்டு மருந்து கண்ணாடி தேவைகளை நீக்குவது மட்டுமின்றி, கண்கள் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்கிறது. இந்த மருந்தினை ஆண்டு கணக்கில் பயன்படுத்தினாலும் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக  என்டோட் பார்மாசூட்டிகள் நிறுவனம் கூறியுள்ளது. பிரஸ்போபியா பாதிப்பினை காண்டாக்ட் லென்ஸ் அல்லது அறுவை சிகிச்சையின் மூலமும் தீர்க்கலாம்.

கண் சொட்டு மருந்து

ஆனால் இப்போது அதெல்லாம் தேவையில்லை.  வெறும் ஒரு சொட்டு மருந்து மட்டுமே போதும் என்கின்றன இந்த சொட்டு மருந்து .  இந்தியாவை பொறுத்தவரை 2019 முதலே இதற்கான  ஆராய்ச்சி தொடங்கிவிட்டது. கண்ணில் செலுத்திய 15 நிமிடத்திலேயே சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது.   கண் குறைபாடு பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகவே திகழும் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.  இன்னும் சில நாட்களில் இந்த சொட்டு மருந்து விற்பனைக்கு வரும் நிலையில் ரூ.350 க்கு இந்த சொட்டு மருந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web