நாளை முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையேற்றம்... பொதுமக்கள் கடும் அதிருப்தி!
அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி10 மற்றும் 12 சதவீத விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்த, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் “ பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்கலாம் என ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது’ என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் பத்திரங்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை உருவான நிலையில் மருந்து நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை வாரி வழங்கியுள்ளன. அவற்றில் ரூ.52 கோடிக்கு பத்திரம் வாங்கிய அரபிந்தோ பார்மா நிறுவனம், மொத்த தேர்தல் பத்திரத்தில் பாதிக்கும் மேல் பிஜேபிக்கு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஹெட்டோரோ டிரக்ஸ் லிமிடெட், எம்எஸ்என் பார்மா கம் பிரைவேட் லிமிடெட் மற்றும் நாட்கோ பார்மா லிமிடெட் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களுக்கு நிதியை வழங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் குறிப்பிட்ட சில மருந்து நிறுவனங்கள் தங்களது ஆண்டு வருவாயில் 12 முதல் 13 சதவீதம் வரை ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!