ஏசி, ஏர் கூலர் விலை கடும் உயர்வு... ரூ.15,000 வரை அதிகரிப்பு!

 
உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்! உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

தமிழகத்தில் இன்னும் அக்னி வெயில் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கவே இல்லை. அதற்குள்ளாகவே பல மாவட்டங்களில் வெயில் சதத்தைக் கடந்து அனல் காற்று வீசி வருகிறது.

நாடு முழுவதும் மக்களை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஏசி வாங்க முடியாத நடுத்தர மக்கள் ஏர் கூலர்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது கூலர்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள செய்தி நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ள்ளது.

பிரபல கூலர் தயாரிப்பு நிறுவனமான ராம் கூலர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏர் கூலர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

இதன் காரணமாக, ஏர் கூலர்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், அதன் விற்பனை விலையை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு கூலரின் விலை ரூ.15,000 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கூலர் வகை

பழைய விலை (ரூ.)

புதிய விலை (ரூ.)

மினி கூலர்

₹300 - ₹1,500

₹499 - ₹2,000

பர்சனல் கூலர்

₹3,000 - ₹6,500

₹4,500 - ₹9,000

டவர் கூலர்

₹6,000 - ₹7,500

₹8,000 - ₹10,000

டெசர்ட் கூலர்

₹7,000 - ₹11,000

₹9,000 - ₹15,000

ஏசி

ஏசி விலையும் உயர்வு:

கூலர்கள் மட்டுமல்லாது, தாமிரத்தின் விலை உயர்வு மற்றும் புதிய மின் சேமிப்பு விதிகள் காரணமாக வோல்டாஸ், டைகின் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஏசி விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கோடையில் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் சாதனங்களின் விலையேற்றம், சாமானிய மக்களின் பட்ஜெட்டைப் பதம் பார்த்து வருகிறது. பல கடைகளில் பழைய விலையிலேயே கையிருப்பில் உள்ள கூலர்களை வாங்க மக்கள் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.