“ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பெருமை” - இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை 2026-ன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்திய வீரர்களைப் பாராட்டிப் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Champions!
— Narendra Modi (@narendramodi) March 8, 2026
Congratulations to the Indian team on winning the ICC Men’s T20 World Cup!
This remarkable triumph reflects exceptional skills, determination and teamwork. They have shown outstanding grit through the tournament.
This victory has filled every Indian heart with…
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி வீரர்களின் அபாரத் திறமை மற்றும் குழு முயற்சியால் சாத்தியமானது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் காட்டிய உறுதிப்பாடும், அசாத்தியமான மனவலிமையும் பாராட்டுக்குரியது. இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமையாலும், அளவற்ற மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நியூசிலாந்து அணிக்குக் கடினமான இலக்கை நிர்ணயித்தது. பின்னர் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடித் தாக்குதலால் நியூசிலாந்து அணி திணறியது. இறுதியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, 2024-ம் ஆண்டைத் தொடர்ந்து மீண்டும் கோப்பையைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்தது.

நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று மாலை டெல்லி திரும்ப உள்ளனர். அவர்களைச் சந்திக்கப் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பையை 3 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
