நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரி - தர்மபுரியில் அதிர்ச்சி!

 
ஆபாச வீடியோ

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, குடும்பத் தகராறைத் தீர்த்து வைப்பது போல் நடித்து நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்துப் பாலியல் அச்சுறுத்தல் அளித்த கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறை, கணவரின் நண்பரான கோவில் பூசாரி ரகுராம் (28) என்பவர் சமாதானம் செய்து வைத்துள்ளார். பின்னர், காரில் அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருப்பது போல் படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதை வைத்துப் பெண்ணை மிரட்டிப் பாலியல் அச்சுறுத்தல் அளித்துள்ளார்.

செல்போன் சிசிடிவி ஆபாச வீடியோ புகைப்படம்

தனிமையில் இருந்த போது மறைமுகமாக எடுத்த வீடியோவைச் சென்னையில் உள்ள தனது நண்பருக்கு ரகுராம் அனுப்பியுள்ளார். அந்த நபரும் பெண்ணை மிரட்டி வீடியோ காலில் ஆபாசமாகப் பேச வைத்து, அதைப்பதிவு செய்து பாலியல் இச்சைக்கு அழைத்துள்ளார். தொடர் மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

ஆபாச வீடியோ

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பூசாரி ரகுராமை நேற்றைய தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சென்னையைச் சேர்ந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.