அமித் ஷா, நிதின் நபினுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 29) அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். நாளை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள முக்கிய மசோதாக்கள், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்த அரசியல் நிலைமைகள் மற்றும் நிர்வாக ரீதியான விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்படவுள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு இடையே பாஜக மேலிடம் மேற்கொண்டுள்ள இந்த ஆலோசனை தேசிய அரசியலில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
