AI உச்சி மாநாட்டுக்கு முன் மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !

 
மோடி

இந்திய பிரதமர்  மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். இந்நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர்  மோடி, எலிசி அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அளித்த வரவேற்பு விருந்திலும்  அதனைத்தொடர்ந்து, மாநாட்டிலும் கலந்துகொண்டார். 
செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு 2025, பிப்ரவரி 11 மற்றும் 12ம் தேதிகளில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர்  மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.

மோடி


இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் உலகளாவிய பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட AI செயல்முறைகளை வழங்குதல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த AIஐ உருவாக்குதல், மற்றும் பயனுள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட உலகளாவிய நிர்வாகத்தை உறுதி செய்தல் போன்ற விஷயங்கள் அடங்கும்.
அதைப்போல மாநாட்டில் பேசிய ஜேடி வான்ஸ், AI வளர்ச்சியில் அதிக கட்டுப்பாடுகளுக்கு பதிலாக சுதந்திரமான அபிவிருத்தி தேவை எனக் கூறினார். இத்துடன், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய விவகாரங்களிலும் உரையாடல்கள் நடைபெற்றன.

மோடி


 
இன்று மாநாடு நடப்பதற்கு முன்பு நேற்று பிப்ரவரி 10ம் தேதி பிரான்ஸ் அதிபர் மாக்ரோன், பாரிஸின் ஏலிசே அரண்மனையில் ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இதில் பிரதமர் மோடியும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ்ஸும் கலந்து கொண்டனர். ஜேடி வான்ஸின் வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடியுடனான இது முதலாவது நேரடி சந்திப்பு என்பதால் உலக அளவில் கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
இங்கு பயணத்தை முடித்த பிறகு அடுத்ததாக பிரதமர் மோடிவரும்  பிப்ரவரி 12 முதல் 14 வரை,  அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். அங்கு பயணம் மேற்கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!