வைரல் வீடியோ... பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்!

 
modi
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற்று வருகிறது.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடி வருகிறார்கள். இதுவரை 38 கோடி பேர் புனித நீராடியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மகா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில் படகில் சென்று புனித நீராடினார்.

modi

அதை தொடர்ந்து கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்து வழிபட்டார்.  பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.முன்னதாக கடந்த வாரம், காவி வேட்டி அணிந்தபடி திரிவேணி சங்கத்தில் அமித் ஷா புனித நீராடினார். யோகி ஆதித்யாநாத், பாபா ராம்தேவ் உட்பட பல்வேறு துறவிகள் அவருடன் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web