நாளை மகா கும்பமேளாவில் புனித நீராடும் பிரதமர் மோடி!

 
மோடி

உத்திரப்பிரதேச மாநிலத்தில்  பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா புனித நீராடியுள்ளார்.

கும்பமேளா

 இந்நிலையில் பிரதமர் மோடி நாளை பிப்ரவரி 5ம் தேதி பிரயாக்ராஜ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  டெல்லியிலிருந்து விமான படைக்குச் சொந்தமான விமானத்தில் அவர் காலை 10.45 மணிக்குப் பிரயாக்ராஜ் செல்கிறார். பின்னர் படகுமூலம் ஏரியல் கோட் பகுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.

கும்பமேளா பிரக்யாராஜ் முஸ்லிம்

தலைநகர் டெல்லியில் நாளைச் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கும்ப மேளாவில் புனித நீராட இருக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. புனித நீராடியபிறகு  பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web