அரசியலமைப்பு தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து... அம்பேத்கரின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்!

 
மோடி அரசியலமைப்பு அம்பேத்கர்

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இன்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை நினைவுகூர்ந்து அவர் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

வெளிநாடு மோடி பயணம் வணக்கம்

இந்திய ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாக நமது அரசியலமைப்புச் சட்டம் திகழ்கிறது என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டிற்கு நமது அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து வழிகாட்டும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றம் மற்றும் குடிமக்களின் உரிமைகள், கடமைகளை நிலைநிறுத்துவதில் அரசியலமைப்பு விழுமியங்கள் என்றும் துணை நிற்கும் என்றும் அவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.