வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Oct 1, 2026, 09:00 IST
ஆசிய விளையாட்டுப் போட்டியின் வில்வித்தை ஆடவர் ஒருங்கிணைந்த குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்ற குஷால் தலால், சாஹில் ராஜேஷ் ஜாதவ் மற்றும் கணேஷ் மணிரத்னம் திருமுரு ஆகியோர் அடங்கிய குழுவினர் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினர்.

இந்திய அணியின் துல்லியமான செயல்பாடுகள் மற்றும் சிறப்பான குழுப்பணி வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்ததாகப் பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, தங்கம் வென்ற வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
