உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி!

 
மோடி மோடி

உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் குறித்து அமெரிக்காவின் 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் நடத்திய சமீபத்திய  ஆய்வில், பிரதமர் மோடி 68 சதவீத ஆதரவுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மீண்டும் உருவெடுத்துள்ளார்.

இந்த ஆய்வில் மற்ற நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியை விட வெகு தொலைவிலேயே உள்ளனர். நரேந்திர மோடி (இந்தியா): 68% ஆதரவுடன் முதலிடம், கை பார்மெலின் (சுவிட்சர்லாந்து) & லீ ஜே-மியுங் (தென்கொரியா) 62% ஆதரவுடன் இரண்டாம் இடம். மார்க்கு கார்னி (கனடா) 55% ஆதரவுடன் 7-வது இடம். டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா) 39% ஆதரவுடன் முதல் 10 இடங்களுக்கு வெளியே (14-வது இடம்) உள்ளார். இம்மானுவேல் மேக்ரான் (பிரான்ஸ்): 17% ஆதரவுடன் பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளார்.

மோடி ட்ரம்ப்

நிர்வாகத் திறனில் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் 10 கோடி (100 Million) பின்தொடர்பாளர்களைக் கடந்த உலகின் முதல் அரசியல் தலைவர் மற்றும் உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 4.3 கோடி ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதாவது டிரம்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான செல்வாக்குடன் மோடி டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இது தவிர, கடந்த மார்ச் 22-ஆம் தேதியன்று பிரதமர் மோடி மற்றொரு வரலாற்றுச் சாதனையும் படைத்தார். இந்தியாவின் மிக நீண்ட காலம் (தொடர்ச்சியாக மற்றும் மொத்தமாக) முதலமைச்சர் மற்றும் பிரதமர் என நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர்களின் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.