ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து!

 
ஆசிய

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 85 பதக்கங்களை வென்று சர்வதேச அளவில் நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆசிய நீளம் தாண்டுதல் வெள்ளி அன்ஸி சோஜன்

ஜப்பானில் நடந்த இப்போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வீரர்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். 

ஆசிய கோல்ஃப் பிரணவி

வரும் காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளிலும் இதேபோன்று சிறப்பான திறனை வெளிப்படுத்தி நாட்டிற்கு மேலும் பல பதக்கங்களைப் பெற்றுத் தர வேண்டும் என வீரர்களை அவர் ஊக்கப்படுத்தினார். இந்தச் சந்திப்பின் போது, வெற்றி பெற்ற வீரர்கள் பிரதமரிடம் தங்களது விளையாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.