பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்... அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று அபுதாபி புறப்படுகிறார். இன்று அபுதாபி செல்லும் பிரதமர் மோடி, அதன் பின்னர், பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார். இந்த பயணத்தின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் செல்வது இது ஏழாவது முறை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று நாளை பிப்ரவரி 14ம் தேதி இந்திய பிரதமர் மோடி, அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைத்து, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களிடமும் உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக மேலும் தகவல் வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், “2024-ம் ஆண்டு துபாயில் நடைபெற உள்ள உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்று உச்சி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகிறார்.இது தொடர்பாக மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “2024ல் துபாயில் நடைபெற உள்ள உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உச்சி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!