"மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு கிடைக்கட்டும்" - பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து!
தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை நாடு முழுவதும் பொதுமக்கள் விமரிசையாகக் கொண்டாடி வரும் நிலையில், இந்திய நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியாக வெளியிட்டுள்ள பதிவில், "மங்களகரமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒளியால் ஜொலிக்கிறது. இந்த தீப ஒளித் திருவிழா, இருளுக்கு எதிரான நமது உறுதியின் பிரதிபலிப்பாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தப் பண்டிகையும், வரவிருக்கும் காலமும் உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்."
தொடர்ந்து தனது உரையில் எல்லைப் பாதுகாப்புப் படைகள் குறித்துப் பேசிய பிரதமர், "நானும் தீபாவளியைப் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். தாய்நாட்டைக் காக்கும் நமது வீரமிக்க ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது எனது வழக்கம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த மரபு இந்த முறையும் தொடரும். மீண்டும் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று முப்படைகளின் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதைப் வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைச் சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
