"திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றும் பிரதமர்" - வானதி சீனிவாசன்
உஸ்பெகிஸ்தான் பயணத்தின் போது திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்து, அதனை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மனதார வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.
உஸ்பெக் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட உஸ்பெகிஸ்தான் கல்வி நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதற்கு வானதி சீனிவாசன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் போன்ற உலகப் பொதுமறை படைப்புகள் இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே உள்ள கலாச்சார உறவையும், பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் அறிஞர்களின் சிறப்புகள் மற்றும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து உலக அரங்கில் பறைசாற்றி வருவதாக அவர் மேலும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
