மும்பையில் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்... பின்னால் அமர்ந்து பயணித்த இளவரசி கேட்... வைரல் வீடியோ!
இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், மும்பையில் மின்சார ஆட்டோவை தானே ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவருடைய மனைவி இளவரசி கேட் மிடில்டன் ஆட்டோவின் பின்புற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக மும்பையில் நடைபெறும் 2026-ம் ஆண்டுக்கான 'எர்த்ஷாட் பரிசு' நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தேர்வான 15 பேரைச் சந்திப்பதற்காக, மும்பை பாந்த்ரா-வொர்லி கடல் பாலம் அருகே உள்ள பூங்காவுக்கு இளவரசர் தம்பதியினர் வந்தனர். அப்போது, இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் தயாரித்த மின்சார ஆட்டோவை இளவரசர் வில்லியம் தானே ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் கேட் மிடில்டன் அமர்ந்து பயணம் செய்தார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது. முன்னதாக, மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து இருவரும் கிரிக்கெட் விளையாடியதுடன், மும்பை மெட்ரோ ரெயிலிலும் பயணம் செய்தனர்.
