முதல்வரை சந்திக்க முன் அனுமதி.. ‘கெடுபிடி’ காட்டும் ஜெகதீஷ்.. ஜூனியர் அமைச்சர்கள் அதிருப்தி!

 
ஜெகதீஷ்

தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பேசுவதற்கு அவரது தனிச் செயலாளரிடம் காரணத்தைக் கூறி முன் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் ஆளுங்கட்சியின் ஜூனியர் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக முதலைச் சந்தித்துப் பேசும் வழக்கத்திற்கு மாறாக, இனி அவரது தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமியிடம் சந்திப்புக்கான காரணத்தைத் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகதீஷ்

அமைச்சர்களாக இருப்பவர்களே முதலைச் சந்திப்பதற்குத் தனிச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், ஜூனியர் அமைச்சர்கள் சிலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து அதிருப்தியில் உள்ள சில அமைச்சர்கள் மூத்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்துத் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர்களின் இந்த முறையீட்டைக் கேட்டறிந்த புஸ்ஸி ஆனந்த், இது தொடர்பான நிலவரத்தை உடனே முதலமைச்சரின் கவனத்திற்குக்கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.