புழல் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்; காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை!

 
புழல்

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த விசாரணை கைதி ஒருவர் திடீரெனச் சிறையிலிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜே.ஜே. நகர் காவல்துறையினரால் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் மொஹாட்டி என்பவர், புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

 புழல் மத்திய சிறை

இந்நிலையில் பாதுகாப்பு மிகுந்த புழல் சிறையிலிருந்து அவர் எதிர்பாராதவிதமாகத் தப்பியோடியுள்ளார். கைதி தப்பியது குறித்துச் சிறைக் காவலர்கள் உடனடியாகப் புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கொண்ட மத்திய சிறையிலிருந்து விசாரணை கைதி எப்படி தப்பிச் செல்ல முடிந்தது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய சுதீப் மொஹாட்டியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.