சேலத்தில் தனியார் பேருந்து கட்டணங்கள் திடீர் உயர்வு!

 
தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

சேலத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றித் தனியார் நகரப் பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசு அனுமதி பெறாமல், பயண தூரத்தின் அடிப்படையில் பேருந்துக் கட்டணமானது ரூ. 4 முதல் ரூ. 12 வரை வரைமுறையின்றி உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

தனியார் சொகுசு ஆம்னி பேருந்து

சேலம் முதல் ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி மற்றும் ஈரோடு வரையிலான வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு மற்றும் பணியாளர்களின் சம்பளம் போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறி பேருந்துகளில் விளக்கச் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.

பயணிகள் அளிக்கும் தொகையில் சில்லறை கொடுப்பதில் உள்ள சிக்கல் காரணமாகவே கட்டணத்தை ரவுண்ட் ஆஃப்  செய்து வசூலிப்பதாகப் நடத்துநர்கள் கூறுகின்றனர். அனுமதியின்றி கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வழக்குகள் பதிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

தனியார்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தன்னிச்சையான கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தி, உயர்த்தப்பட்டக் கட்டணத்தைத் திரும்பப் பெற மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.