தனியார் கல்லூரி முதல்வர் கார் விபத்தில் பலி - குடும்பத்தினர் 5 பேரும் படுகாயம்!

 
ஈரோடு கல்லூரி முதல்வர்

ஈரோட்டைச் சேர்ந்த பிசியோதெரபி கல்லூரி முதல்வர், உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற கோரக் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் பிசியோதெரபி கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்தார். தனது மகனின் கல்லூரிச் சேர்க்கைக்காகச் சென்னைக்குச் சென்றுவிட்டு, குடும்பத்தினருடன் காரில் மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

கார் விபத்து

கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துச் சாலையின் தடுப்புக்கட்டையில் மோதியது. பின்னர் நிலைதடுமாறி எதிரே வந்த மற்றொரு கார் மீதும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கல்லூரி முதல்வர் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவி, மகன் உட்பட காரில் பயணித்த 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.