BIG BREAKING... பகீர்.... மலைச்சரிவில் விமானம் மோதி உயர்ந்த தீப்பிழம்பு... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
சத்தீஸ்கர் சத்தீஸ்கர்

 

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) மதியம் ஒரு தனியார் விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. 'செஸ்னா காரவன்' (Cessna Caravan) ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், ஜஷ்பூர்-நாராயண்பூர் எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மரத்தின் மீது மோதி மலைச்சரிவில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால், அந்த மலைப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், விமானம் விழுந்து நொறுங்கிய விதத்தைப் பார்க்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகளில், விமானத்தின் சிதறிய பாகங்கள் தீப்பிழம்புகளுக்கு இடையே எரிந்து கொண்டிருப்பது தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் மற்றும் அவர்கள் எங்கு சென்று கொண்டிருந்தனர் என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

தகவல் அறிந்தவுடன் காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகக் குழுவினரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். வனப்பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு என்பதால், மீட்புக் குழுவினர் அங்கு செல்வதில் கடும் சிரமங்களைச் சந்தித்தனர். தற்போது தீ அணைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோர விபத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.