நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம் – காதலர் ராஜ்வேலை கரம்பிடித்தார்... வைரல் போட்டோஸ், வீடியோ!
சின்னத்திரையில் தொகுப்பாளினியாகப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பத்து தல’, ‘டிமான்டி காலனி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். சமீபத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து ‘இருமுடி’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜை இன்று (நவம்பர் 11) திருமணம் செய்துகொண்டார். கல்லூரிப் பருவத்தில் தொடங்கிய இவர்களது காதல், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த நிலையில், தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
சென்னையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதையடுத்து, ரசிகர்களும் திரையுலகினரும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
