ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் - 'ஃபர்ஸ்ட் லுக்' படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!
மறைந்த இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரையுலக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியச் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இப்புத்தகத்திற்கு 'எம்பிரஸ்: தி டெபனிட்டிவ் பயோகிராஃபி ஆஃப் ஸ்ரீதேவி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தைப் பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் குழந்தை நட்சத்திரப் பருவம் முதல் இந்தியச் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தது வரையிலான பல அறியப்படாத சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், அவரது தனிப்பட்ட வாழ்க்கைப் பக்கங்களையும் இப்புத்தகம் பேசவுள்ளதால், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்பிகளிடையே இப்புத்தகத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
