பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.. விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த வினேஷ் போகத்!

 
வினேஷ் போகத்

எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஹரியானா தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹரியானா பஞ்சாப் மாநில எல்லையான ஷம்புவில் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 200வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு வினேஷ் போகத் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறார் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல என்றார்.

விவசாயிகளின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாததாலும், சில சமயங்களில் அவர்களுக்காக எதையும் செய்ய முடியாமல் போவதாலும் விவசாயிகள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. நாங்கள் சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், ஆனால் எங்கள் சொந்த குடும்பத்திற்காக எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் சொல்வதை அரசு கேட்க வேண்டும்.

நாட்டின் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அவர்களின் போராட்டம் வீண் போகாது என்று உறுதியாக நம்புகிறேன். இதனிடையே அம்மாநிலத்தில் அக்டோபர் 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு அரசியல் தெரியாது, அறிவும் இல்லை என்றார். ஹரியானா மாநிலம் பலாலியைச் சேர்ந்த வினேஷ் போகத் தனது 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள சர்வ்காப் பஞ்சாயத்தால் அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அப்போதைய தலைவர் மற்றும் பாஜக தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web