இந்த 3 ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்!

 
கஜகேசரி யோகம் ராசி ராசிபலன் ஜோதிடம்

மேஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவும். பேச்சுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் மதிப்பு கூடும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

ரிஷபம்
துணிச்சலான முடிவுகளை எடுத்து காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கோபமான பேச்சுக்களைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற அலச்சல் மற்றும் வீண் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம்
எதிர்பார்த்த பணவரவில் சிறு தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் தோன்றக்கூடும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்திலும் உடமைகளிலும் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

ராசி

சிம்மம்
கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்துச் செய்யும் முடிவுகள் சாதகமான பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து மன அமைதியும் ஆரோக்கியமும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கன்னி
எடுத்த காரியங்களில் சிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

துலாம்
பொருளாதார நிலை உயரும். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல பலனைத் தரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம்
வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலுவலகப் பணிகளைத் திட்டமிட்டுச் செய்வது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது மன அமைதியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

தனுசு
புதிய தொடக்கங்களுக்கும் முயற்சிகளுக்கும் ஏற்ற நாள். எதிர்பார்த்த சுபச்செய்திகள் தேடிவரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம்
பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

கும்பம்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 7

மீனம்
பயணங்கள் செய்ய நேரிடலாம். செய்யும் வேலைகளில் வழக்கத்தை விடக் கூடுதல் உழைப்பும் நேரமும் தேவைப்படும். பொறுப்புகள் அதிகரித்தாலும் இறுதியில் மன அமைதியும் முன்னேற்றமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9