ரயிலில் பேராசிரியரிடம் கைவரிசை.. கைப்பையை பறித்து எஸ்கேப் ஆன நபருக்கு வலைவீச்சு!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சுதா. திருச்சியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இந்நிலையில், சுதா திருவாரூரிலிருந்து அகஸ்தியம் பள்ளிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மணலி என்ற இடத்தில் ரயிலில் அமர்ந்திருந்த சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்து எடுக்க முயன்றார்.
சுதா அலறிய உடனே, தங்க சங்கிலியை விட்டு விட்டு, சுதாவின் கைப்பையை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றார். தனது கைப்பையில் ரூ.25,000 மற்றும் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருந்ததாக சுதா ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தார்.
ஓடும் ரயிலில் பேராசிரியரிடமிருந்து கைப்பையை பறித்து தப்பிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!