கள்ளக்காதலுக்குத் தடை... கணவனின் உடலில் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்திய மனைவி!

 
உல்லாசம் மனைவி காதலி கள்ளக்காதல் கொலை

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டும், பின்னர் உடலில் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை வலுக்கட்டாயமாகச் செலுத்தியும் கொடூரமாகக் கொலை செய்த மனைவி, அவரது காதலன் உட்பட 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் சந்தியா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி வாழ்ந்து வந்த நிலையில், சந்தியாவிற்கு அனில் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் பிரசாந்திற்குத் தெரியவந்ததால், தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பிரசாந்தைத் தீர்த்துக்கட்ட சந்தியாவும், அவரது காதலன் அனிலும் கூட்டாகச் சதித் திட்டம் தீட்டினர். இதன்படி, முதலில் பிரசாந்தை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளிக் கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த விபரீத முயற்சியில் கடுமையான காயங்களுடன் பிரசாந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

முதல் முயற்சி தோல்வியடைந்த போதிலும், தங்களது கொலை வெறியைக் கைவிடாத சந்தியாவும் அவரது காதலனும், காயமடைந்த பிரசாந்தை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டில் வைத்து பிரசாந்திற்கு வலுக்கட்டாயமாக அதிக வீரியமுள்ள மயக்க மருந்தைச் செலுத்தி அவரை நிலைகுலையச் செய்துள்ளனர். அவர் சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, ஒரு குழாய் மூலமாகக் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் வீரியமிக்க இரசாயனத் திரவத்தை அவரது உடலில் செலுத்தியுள்ளனர். இந்த இரசாயனம் உடலில் பரவியதன் காரணமாகப் பிரசாந்த் துடிதுடித்துப் பரிதாபமாகக் உயிரிழந்தார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

பிரசாந்தின் திடீர் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். உடற்கூறாய்வு அறிக்கையில் உடலில் இரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் தங்களது பாணியில் நடத்திய விசாரணையில் சந்தியா மற்றும் அனிலின் கொடூரச் சதி வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, கொலையாளி சந்தியா, அவரது கள்ளக்காதலன் அனில் மற்றும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபர் என மொத்தம் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் மூவரும் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் மோகத்தால் கணவனை இரசாயனம் செலுத்திக் கொடூரமாகக் கொன்ற இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.