'நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்' - தவெக அரசின் உறுதிமொழி!

 
ஆளுநர் உரை சட்டப்பேரவை ஆளுநர் உரை சட்டப்பேரவை

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான மாநிலத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவையில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், புதிய தவெக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டைப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மற்றும் தொழில் கட்டமைப்பில் ஒட்டுமொத்த இந்தியாவின் "முன்னோடி மாநிலமாக" மாற்றுவதே இந்த தவெக அரசின் முதன்மை இலக்கு என ஆளுநர் குறிப்பிட்டார்.

மாநில அரசுக்குச் சில நிதிப் பற்றாக்குறைகளும், பொருளாதார நெருக்கடிகளும் இருந்த போதிலும், தவெக தனது தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் எவ்வித தொய்வுமின்றி, முழுமையாக நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் திட்டவட்டமாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

f

சட்டப்பேரவை தொடங்குவதற்கு முந்தைய நாள் தவெக அரசு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இந்த ஆளுநர் உரை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆளுநரின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், தவெக-வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முறையான நிதியொதுக்கீடு மற்றும் வழிகாட்டுதல்களை அரசு விரைந்து மேற்கொள்ளும் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.