அர்ஜூன் சம்பத் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
இன்று காலை அனுமதியில்லாமல் இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் இந்து முன்னணி கட்சியினரைக் கைது செய்தனர். அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் உட்பட கட்சியினரைக் கைது செய்தனர். இந்து முன்னணி கட்சி நிர்வாகிகளைக் கைது செய்ததைக் கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மேலப்பாளையத்தில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், மற்றும் பொறுப்பாளர்களை கைது செய்த நெல்லை மாநகர் காவல் துறையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக டுவீபுரம் 5 தெருவில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம், கவி சண்முகம், மற்றும் நிர்வாகிகள் சுதாகர், முத்துகிருஷ்ணன், ராஜ், ஆறுமுகம், பழனி ஆண்டி, கோபி, முருக ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!