JUSTICE 4 MOUMITA |ஜிப்மரில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்... நோயாளிகள் அவதி!

 
போராட்டம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு முடங்கியது. இருப்பினும் அவசர சிகிச்சை, ஐசியூ, பிரசவ வார்டுகள் இயங்கின.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

போராட்டம்
இந்நிலையில், கொல்கத்தா சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரியும் இன்று ஜிப்மரில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், நர்சிங் பணியாளர்கள்  என 900க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.  இதனால் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் இன்றி முடங்கியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!