டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது!

 
டெல்லி கைது

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடுகளைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பாதுகாப்பு காரணங்களுக்காகக் காவல்துறை தடை விதித்திருந்தது.

டெல்லி

தடையை மீறி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியினரைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அங்கிருந்து அகல மறுத்த போராட்டக்காரர்களைப் பிடித்து இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றி வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.